The story of Paḻaiyaṉūr nīli

புராண காப்பியங்கள்
Audio Books
நீலி கண்ணீர் வடிக்காதே..
FULL

நீலி அம்மன் அல்லது பழையனூர் நீலி அம்மன் என்பது ஒரு தமிழ் நாட்டார் தெய்வம் ஆகும். இந்த தெய்வத்தை தென்தமிழ் நாட்டில் இசக்கி அம்மன் என்ற பெயரில் வழிபடப்படுவதாக கருதப்படுகிறது. இத்தெய்வத்திற்கான கோயில் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ளது.

பழையனூர் நீலியின் கதை சிற்சில மாறுபாடுகளுடன் கூறப்படுகிறது. அதில் ஒரு வடிவம் இது; பழங்காலத்தில் காஞ்சி நகரத்தைச் சேர்ந்த அந்தணரான புவனபதி என்பவர் திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். காசி யாத்திரை செல்லத் திட்டமிட்ட புவனபதி காசிக்கு சென்று அங்கேயே சில காலம் தங்கியிருந்தார். அப்போது அங்கிருந்த சத்தியஞானி என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. அவரின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்ற புவனபதி சத்தியஞானியின் மகளான நவக்கியானியைக் கண்டு ஆசைப்பட்டு தனக்கு திருமணமானதை மறைத்து அவளை திருமணம் செய்துகொண்டார். கொஞ்ச காலம் கழித்தபிறகு தன் ஊரான காஞ்சிக்கு புறப்பட்டார் புவனபதி. நவக்கியானி தானும் உடன் வருவதாக அடம்பிடித்ததால் வேறு வழியில்லாமல் அவளையும் உடன் அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். இவர்களுடன் நவக்கியானியின் அண்ணன் சிவக்கியானியும் புறப்பட்டார். சொந்த ஊரை நெருங்கும்போது இவர்களை என்ன செய்வது என்று புவனபதி யோசித்தார். ஒருநாள் மாலையில் திருவாலங்காட்டை அடைந்து அவர்கள் அங்கேயே இரவைக் கழிக்க முடிவு செய்தனர். அங்கே தங்கி இருந்தபோது குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவருமாறு கூறி மைத்துனனை அனுப்பிவிட்டு, இரண்டாவது மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு ஊருக்குப் புறப்பட்டுவிட்டார் புவனபதி. தண்ணீருடன் வந்த அண்ணன், தங்கை இறந்துகிடப்பதைப் பார்த்து துடித்து தானும் அருகில் இருந்த புளிய மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் இருவரும் நீலன், நீலி என்ற பேய்களாக அந்த ஆலங்காட்டில் சுற்றித் திரிந்தனர். நீண்டகாலம் கழித்து அடுத்த பிறவியில் புவனபதி வணிக குலத்தில் தரிசனன் என்ற பெயரில் பிறந்தார். குழந்தை பிறந்தபிறகு அதன் சாதகத்தைக் கணித்த சோதிடர்கள், இவனைப் பழிவாங்க வடக்கில் ஒரு பேய் காத்துக் கொண்டிருக்கிறது. எனவே வடக்கில் செல்வதை தவிர்கவும் என்று அறிவுரை கூறினர். மேலும் அந்த பேயிடம் இருந்து தப்பிக்க மந்திரித்த கத்தி ஒன்றை கொடுத்தனர். தரிசனன் வளர்ந்த பிறகு காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணைப் திருமணம் செய்து வைத்தார்கள். தரிசனனின் தந்தை இறப்பதற்கு முன், அவருக்கு இருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறி, மந்திரக் கத்தியை உடன் வைத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு இறந்துபோனார்...

Comments

Popular posts from this blog

Love Stories

TAMIL EBOOKS

Articles