The story of Kumana Vallal
- Get link
- X
- Other Apps
வரலாற்று நாவல்கள்
Audio Books
குமணன் சங்ககால மன்னர். முதிரம் இவர் நாடு. இவர் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவரைப் பாடியுள்ளனர். இவர் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர். இவரது தம்பி இளங்குமணன்.
குமணன் அரசனாக விளங்கியபோது பெருஞ்சித்திரனார் தன் வறுமை நிலையைக் கூறிக் குமணனிடம் தான் யானைமீது செல்லும் வகையில் பரிசில் தருமாறு வேண்டினார். அவனும் அவ்வாறே கொடுத்தான். தன் இல்லம் திரும்பும் வழியில் இளவெளிமான் நாட்டுக்கு வந்து தன் பெருமிதம் தோன்றத் தன் யானையை அவனது காவல்மரத்தில் கட்டிவிட்டு, அவனிடமே சென்று தன் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.
குமணனை அவன் தம்பி இளங்குமணன் நாடுகடத்திவிட்டான். குமணன் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்தான். குமணனிடம் பரிசில் பெறச் சென்ற புலவர் பெருந்தலைச்சாத்தனார் நிலைமையைத் தெரிந்துகொண்டு காட்டிற்குச் சென்று குமணனைப் பாடினார். புலவருக்குத் தரக் குமணனுக்குத் தன்னைத் தவிர வேறொன்றும் இல்லை. குமணன் தன் வாளைப் புலவர்க்குக் கொடுத்தான். குமணன் தலையைக் கொண்டுவருவோருக்குத் தக்க பரிசில் வழங்கப்படும் என்று இளங்குமணன் அறிவித்திருந்தான். குமணன் தன் வாளைப் புலவருக்குக் கொடுத்தது, தன் தலையையே வெட்டியெடுத்து எடுத்துச் செல்வதற்காகவே. குமணன் தந்த வாளே தனக்குப் போதும் என்று வாளைமட்டும் எடுத்துக்கொண்டு புலவர் இளங்குமணனிடம் வந்து வாளைக் காட்டி நிகழ்ந்ததைக் கூறினார். இளங்குமணன் புலவர்க்குப் பரிசில் நல்கியிருக்கலாம். அதைக்கொண்டு புலவர் தன் வறுமையைப் போக்கிக்கொண்டிருக்க வேண்டும்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment